தொப்புள் கொடியை அழுத்தும் வகையில் டயபர் போடக்கூடாது. தொப்புள் கொடிக்குக் கீழேதான் டயபர் இருக்க வேண்டும். குழந்தையை குளிப்பாட்டும்போது சிறிது எண்ணெய் அல்லது மருத்துவர் கொடுத்திருக்கும் க்ரீம்களை தொப்புள் கொடி மீது தடவிக்கொண்டால், ஈரம் நிற்காது.
எந்தக் காரணம் கொண்டும் தொப்புள் கொடியை சுத்தம் செய்கிறேன் என்று அமுக்குதல், நீவுதல் இருக்கக்கூடாது.தொப்புள் கொடியில் வீக்கம், ரத்தக்கசிவு போன்றவை தென்படால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மலச்சிக்கல் அல்லது சிறுநீர் செல்வதில் பிரச்னை ஏற்பட்டால் குழந்தைக்கு தொப்புள் வீக்கம் காணப்படலாம். ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்களில் பெரும்பாலும் தொப்புள் உலர்ந்து உதிர்ந்துவிடும் என்பதால் அதுவரை சுகாதாரமாக கவனிக்க வேண்டும்.