மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?

காரணங்கள்:

மாரடைப்பு நோய் திடீரென்று தோன்றுவது அல்ல. 20 ஆண்டுகளானாலும் எந்த விதமான அறிகுறிகளும் இல்லாமலேயே இருக்கும் நோய்.

உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், புகைபிடித்தல், மன அழுத்தம் போன்ற பிரச்னைகளால்  ரத்த நாளத்தின் உட்புற சுவர் பாதிக்கப்படுகிறது. அந்த ரத்த நாளத்திற்குள்  ரத்தத்தில் மிதக்கும் கொழுப்புத் திவலைகள் படிந்துகொண்டே வரும்.

 ரத்த ஓட்டத்துக்கான பாதை குறுகலாகி, ரத்த ஓட்டம் தடைபடும். பிறகு இதய நாளத்தில் விறைப்பு அல்லது உறைகட்டி ஏற்பட்டால், ரத்த ஓட்டம் முழுவதுமாகத் தடைபடும். இதயத் தசைக்கு ரத்த ஓட்டம் தடைபடுவதால், அவை செயலிழக்கின்றன.  

 அதிகமாக உணர்ச்சிவசப்படும் நேரத்தில் சிக்கல் உண்டாகலாம். அதேபோன்று  அளவுக்கு அதிகமானக் கடின உழைப்பு  செய்யும்போதும் மாரடைப்பு  ஏற்படலாம்.  பொதுவாக ரத்த நாளத்திற்குள் அடைப்பு அதிகமாகும்போது, இறுக்கம் அல்லது தீவிர மாரடைப்பு ஏற்படுகிறது. சரியான முதலுதவி எடுத்துக்கொண்டால் மாரடைப்பு நோயில் இருந்து எளிதில் தப்பிக்க முடியும்.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இதய நோயாளிகளுக்கு பலூன் சிகிச்சை முறை (ஆஞ்சியோபிளாஸ்டி) எப்படி செயல்படுத்தப்படுகிறது ??