·
மார்பகத்தை இளஞ்சூடான துணியினால் அவ்வப்போது ஒத்தடம் கொடுத்தால் பால் சுரப்பு நன்றாக இருக்கும்.
·
மார்பு முழுவதையும் மசாஜ் செய்வதும் பலன் அளிக்கக்கூடியதாக இருக்கிறது. முன்பக்கமாக சாய்ந்து மார்பகத்தை நன்றாக குலுக்கிவிட்டால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
·
அமைதியான, தனிமையான இடத்தில் வைத்து பால் கொடுத்தால் போதுமான அளவு பால் சுரப்பு இருக்கும்.
·
புரதச்சத்து மிகுந்த உணவு மற்றும் மிதமான மாவுச்சத்து உணவு தாய் எடுத்துக்கொண்டால் பால் சுரப்பு அதிகரிக்கும்.
கவலைப்படுதல், பசி, கவலை, மன உளைச்சல் போன்ற பிரச்னைகளில் தாய் சிக்கும்போது தாய்ப்பால் சுரப்பு குறைவதற்கான வாய்ப்பு உண்டு. அதனால் பாலூட்டும் தாய் எப்போதும் நிம்மதியாகவும் சந்தோஷத்துடனும் இருக்கவேண்டியது அவசியம்.