அதிக வலி தென்படாத பட்சத்தில் கட்டிக்கொண்ட பாலை கையால் பீய்ச்சி வெளியேற்றிவிடலாம்.துணியை சூடான நீரில் போட்டு எடுத்து மார்பகம் மீது வைத்தால், அந்த சூடு காரணமாக பால் தானாகவே வெளியேறிவிடும்.
குழந்தை பால் குடித்தவுடன் சுடுநீரால் மார்பகத்தை கழுவும் பழக்கம் மேற்கொண்டால் பால் கட்டிக்கொள்ளும் வாய்ப்பு இருக்காது. மிகவும் இறுக்கமான பிரா அணிந்துகொண்டால் பால் கட்டிக்கொள்வதற்கு அதிக வாய்ப்பு உண்டு. அதனால் தாய்ப்பால் கொடுப்பதற்கென பிரத்யேகமாக கிடைக்கும் பிரா பயன்படுத்துவது நல்லது.
கட்டிவிட்ட பாலை குழந்தைக்கு எக்காரணம் கொண்டும் கொடுக்கக்கூடாது. அதனால் பால் கட்டிக்கொள்ளாமல் அவ்வப்போது வெந்நீர் கொண்டு கழுவி வந்தால் எப்போதும் குழந்தைக்கு பால் கொடுக்க முடியும்.