ஆனால், இது உண்மைதான். அமெரிக்காவின் ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றி ஆய்வு நடத்தி, முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இன்றைய நவீன உலகில், கருத்தரிக்காமல் தடுக்க, காண்டம் முதல் கருத்தடை மாத்திரைகள் வரை பல உள்ளன. ஆனால், இவற்றை பின்பற்றுவதில் பலவித சிக்கல்கள் உள்ளதால், எளிதான கருத்தடை முறையை பலரும் எதிர்பார்க்கின்றனர்.
இதன்படி, ஜார்ஜியா ஆராய்ச்சியாளர்கள், கருத்தடை ஹார்மோன்கள் கலந்த கம்மல், மோதிரங்கள், வாட்ச் மற்றும் நெக்லஸ் போன்றவற்றை வடிவமைத்துள்ளனர். இவற்றை அணிந்துகொள்வதால், அவை தோல் வழியாக, ரத்தத்தில் ஊடுருவி, கருத்தரிக்காமல் தடுத்து விடுகிறதாம். ஆனால், இத்தகைய நகைகளை ஓரிரு நாட்கள் மட்டுமே அணிந்துகொள்ள முடியும்.
அதன்பின், அவற்றில் கலந்துள்ள கருத்தடை ஹார்மோன் தீர்ந்தோ அல்லது செயலிழந்தோ போய்விடும். இது நாள்கணக்கில் உழைக்கும் வகையில், ஆய்வு செய்து வருவதாகவும், ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். எப்படி இருந்தாலும், மருத்துவ ஆராய்ச்சியில் இது ஒரு மைல்கல் என, ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.