பிரசவம் முடிந்ததும் தாய்க்கு ரத்தக்கசிவு ஏற்பட்டால் என்ன அர்த்தம்?

பிரசவம் முடிந்ததும் தாய்க்கு ரத்தக்கசிவு ஏற்பட்டால் என்ன அர்த்தம்?

கர்ப்பப்பையின் உட்புற சுவர் கரைவதால் பிறப்புறுப்பு வழியே ரத்தக்கசிவு தென்படும். சிலருக்கு மாதவிலக்கு போன்று அதிகமாக இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு.மிகவும் அதிகமான ரத்தப்போக்கு அல்லது கட்டிக்கட்டியாக ரத்தப்போக்கு இருந்தால் நிச்சயம் மருத்துவர் கவனத்திற்கு இதனை கொண்டுசெல்ல வேண்டும்

நான்காவது நாட்களில் இருந்து ரத்தக்கசிவு வெளிவரும் அளவு குறைந்துவிடும், இதன் நிறமும் மாறிவிடும். ஒரு வாரத்தில் பெரும்பாலும் ரத்தக்கசிவு முழுமையாக நின்று, வெள்ளை நிறத்தில் மட்டும் அவ்வப்போது கசிவு தென்படலாம்.

பொதுவாக இந்த நேரத்தில் ரத்தக்கசிவு  அதிக வலி தருவதாக இருப்பதில்லை. தாங்கமுடியாத வலி அல்லது துர்நாற்றம் இருப்பது தெரிந்தால் உடனே மருத்துவர் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும்

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்