புளிச்ச கீரையின் இலை, மலர், விதை என அத்தனையுமே மருத்துவப் பயன்பாடு கொண்டதாகும். உடலை வலுவாக்கும் வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து புளிச்ச கீரையில் நிரம்பிக் காணப்படுகிறது.
• உடலில் சத்துப்பிடிக்காமல் நோஞ்சானாக காணப்படும் குழந்தைக்கு தொடர்ந்து புளிச்ச கீரை கொடுத்துவந்தால் உடல் நலமும் பலமும் அடையும்.
• தோல் நோய் உள்ளவர்கள் புளிச்ச கீரையை எடுத்துக்கொண்டால் சிரங்கு போன்ற அத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
• ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மையும் உடல் உஷ்ணத்தை சீராக பாதுகாக்கும் தன்மையும் புளிச்ச கீரைக்கு உண்டு.
• புளிச்ச கீரையை தொடர்ந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு வயிற்றுப்புண், குடல் புண் போன்ற சிக்கல்கள் ஏற்படுவதில்லை.
பொதுவாகவே கீரையை இரவில் சாப்பிடக்கூடாது என்பார்கள். அதனால் பகலில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.