·
தொடர்ந்து கேழ்வரகு எடுத்துக்கொள்பவர்களுக்கு எலும்பு ஆரோக்கியமாக இருக்கிறது. அதனால் ஆஸ்டியோ போரோசிஸ் நோய்த் தாக்கம் குறைவாகவே காணப்படும்.
·
பாலில் உள்ள புரதத்துக்கு ஈடான சத்து கேழ்வரகில் இருப்பதால், பால் அலர்ஜி உள்ளவர்கள் கேழ்வரகு கஞ்சி குடிக்கலாம்.
·
கொழுப்பு கேழ்வரகில் மிகவும் குறைவாக இருப்பதால் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த உணவாகும்.
·
முளைகட்டிய கேழ்வரகில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் உடலுக்கு இரும்புச்சத்து கிடைக்கவும் பயன்படுகிறது.