முந்திரி பழத்தை மரத்தில் இருந்து பறித்த 24 மணி நேரத்திற்குள் சாப்பிட்டால் மட்டுமே சுவையாக இருக்கும். அதன்பிறகு வாடை மாறிவிடும். வெளிநாடுகளில் முந்திரி பழம் ஜூஸ் பிரபலமாக இருக்கிறது.
• வைட்டமின் சி சத்து ஆரஞ்சு பழத்தைவிட ஐந்து மடங்கு அதிகமாக முந்திரி பழத்தில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
• ஆன்டி ஆக்சிடன்ட், பீட்டா கரோட்டீன் போன்றவை நிரம்பியுள்ளதால் எலும்புகள் வலுவடைய பயன்படுகிறது.
• நார்ச்சத்து நிரம்பியது என்பதால் அஜீரணக் குறைபாடு, வயிற்று வலி போன்ற பிரச்னைகளைத் தீர்த்து பசியை அதிகரிக்கிறது.
• வைட்டமின் சி குறைபாடு காரணமாக ஏற்படும் ஸ்கர்வி நோயை குறைப்பதற்கும் முந்திரி பழம் பயன்படுகிறது.
முந்திரி பழத்தை அப்படியே சாப்பிட்டால் தொண்டையில் கரகரப்பு ஏற்படும். அதனால் வேகவைத்து அல்லது உப்பு நீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்.