மனதில் நிம்மதியும் மகிழ்வும் இல்லாமல் அவதியா?மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு பாருங்கள்!!

மனதில் நிம்மதியும் மகிழ்வும் இல்லாமல் அவதியா?மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு பாருங்கள்!!

மணத்தக்காளி கீரையில் பாஸ்பரஸ், இரும்புசத்து, உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன. உடல் சூடு உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி அடையும்.
• தேவையற்ற மனக்குழப்பம், எரிச்சல் உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால் மனதில் நிம்மதியும் மகிழ்வும் உண்டாகும்.
• மலச்சிக்கல் மற்றும் சிறுநீர் பிரிவதில் பிரச்னை இருப்பவர்கள் மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும்.
• இந்தக் கீரையை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்கும், உடல் களைப்பு தீரும்.
• மணத்தக்காளியை சாறு எடுத்து சாப்பிட்டால் உடலில் தோன்றும் வீக்கம் குறையும். சருமம் பளபளப்பாகும்.
தேமல், பரு, கரும்புள்ளி உள்ள இடங்களுக்கு மணத்தக்காளி கீரையை அரைத்து பற்று போட்டால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். கசப்புத் தன்மை உடையது என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்