வெண்டையை
நறுக்கும்போது வெளிவரும் பிசுபிசு திரவம்தான் மிகவும் சத்து நிரம்பியது. இதுவே புத்திசாலித்தனம்
ஞாபகசக்திக்கு உதவுகிறது.
·
வெண்டையில்
உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் தேவையில்லாத கெட்ட கொழுப்பை அகற்றி இதயத்துக்கு பேருதவி
புரிகிறது.
·
வெண்டை
சாப்பிடால் மலச்சிக்கல், குடல்புண் ஆறுகிறது. இத்துடன் வாய் துர்நாற்றத்தையும் தீர்த்துவைக்கிறது.
·
நிறைய
வெண்டை சாப்பிடும் ஆண்களுக்கு, தாம்பத்திய வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும், ஆண்மை
குறைபாடு நீங்குகிறது.
சிறுநீரகத்தில் கல் வராமல்
தடுக்க வேண்டுமா? செவ்வாழை சாப்பிடுங்க
வாழைப்பழங்கள் எல்லாமே
மனிதனுக்கு நன்மை செய்கிறது என்றாலும் செவ்வாழை கூடுதல் மருத்துவத் தன்மை கொண்டதாகும்.
·
செவ்வாழையில்
இருக்கும் பொட்டாசியம் காரணமாக சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.
·
பீட்டா
கரோட்டீன் நிரம்பியிருப்பதால் கண் நோய்களைக் குணமாக்குகிறது, குறிப்பாக மாலைக்கண் நோய்
நீங்கும்.
·
தினம்
ஒரு செவ்வாழை சாப்பிடுபவர்களுக்கு நரம்புகள் பலம்பெறுகிறது. நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
·
கல்லீரல்
வீக்கம், பல் நோய்கள், தோல் நோய்கள் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மையும் செவ்வாழைக்கு
இருக்கிறது.
வாய்ப்புண்ணா? தேங்காய் கடிங்க
கேரளா, இலங்கையில் தேங்காய் அதிகம் பயன்படுத்தினாலும்
நம் மக்களுக்கு தேங்காய் மீது பயம் உண்டு.
இந்த பயம் தேவையா?
·
தேங்காய் நார்ச்சத்து
உள்ளது என்பதால் அப்படியே பயன்படுத்தலாம். பால் எடுத்துப் பயன்படுத்தினால் கொழுப்புத்தன்மை
அதிகரிக்கும்.
·
வாய்ப்புண்,
வயிற்றுப்புண்ணுக்கு தேங்காய் அருமருந்தாக பயன்படுகிறது. அப்படியே கடித்துத்தின்றால்
போதும்.
·
எடை
தேறாத குழந்தைக்கு தேங்காய் கொடுத்துவந்தால் விரைவில் பலன் கிட்டும். பூசினவாக்கில்
தெம்பாக குழந்தை இருக்கும்.
·
சிறுநீரக கோளாறு வராமல் தடுத்து உடலுக்கு மினுமினுப்பை தருகிறது. நீரிழிவு, கொழுப்புசத்து
நிரம்பியவர்கள் மட்டும் தவிர்ப்பது நலம்.