பலமான எலும்புக்கு சீதாப்பழம் - பிரசவ வலியைக் குறைக்குமா குங்குமப்பூ - தாய்ப்பால் சுரப்பை நிறுத்த மல்லிகைப்பூ கட்டுங்க

பலமான எலும்புக்கு சீதாப்பழம் – பிரசவ வலியைக் குறைக்குமா குங்குமப்பூ – தாய்ப்பால் சுரப்பை நிறுத்த மல்லிகைப்பூ கட்டுங்க

· இனிப்பு சுவை நிரம்பிய சீதாப்பழம் ரத்த உற்பத்தியை பெருக்குவதுடன் உடலுக்கு வலிமையும் தந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

· வைட்டமின் சி, கால்சியம்சத்துக்கள் நிரம்பியிருப்பதால் எலும்புகள் பலமடைவதுடன் உடல் வளர்ச்சிக்கும் உதவிபுரிகிறது.

· சீதாப்பழத்தின் இலைகளை கொதிக்கவைத்துகசாயமாக தயாரித்து குடித்தால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். கருச்சிதைவும் கட்டுப்படும்.

· இதனை அடிக்கடி சாப்பிட்டுவந்தால்இதயம் பலப்படும். ஆஸ்துமா, காசநோய் போன்றவை கட்டுப்படும்.

பிரசவ வலியைக் குறைக்குமாகுங்குமப்பூ

ஒருபெண் கர்ப்பம் அடைந்தாலே, ‘குங்குமப்பூ சாப்பிட மறந்துடாதே…’ என்பார்கள். ஏனெனில் இதில்நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன.

· குழந்தைசிவப்பாக பிறக்கும் என்பது உண்மையில்லை என்றாலும் கர்ப்பிணித்தாய் குங்குமப்பூ சாப்பிடுவதால்ரத்தம் சுத்தமடைகிறது.

· ரத்தசோகையைப்போக்கும் தன்மை உண்டு என்பதால் குழந்தை வழக்கத்தைவிட பளீச் நிறத்தில் பிறக்கும் என்பதுஉண்மைதான்.

· பிரசவவலியின் தன்மையைக் குறைத்து சுகப்பிரசவம் நடப்பதற்கும் குங்குமப்பூ உதவுகிறது.

· குங்குமப்பூவைபாலில் காய்ச்சி அருந்தினால் ஜீரணசக்தி அதிகரிப்பதுடன், சளி, இருமல் போன்ற தொந்தரவுகள்வராது.

தாய்ப்பால் சுரப்பை நிறுத்தவேண்டுமா? மல்லிகைப்பூ கட்டுங்க

பெண்களின்மனம்கவர்ந்தது மல்லிகைதான். அதனால் இதனை ஆண்களும் விரும்கிறார்கள். இதன் மருத்துவக்குணங்களைப்பார்க்கலாம்.

· கொஞ்சம்மல்லிகையை எடுத்து மார்பில் மூன்று நாட்கள் வைத்து கட்டிவந்தால், தாய்ப்பால் சுரப்புநின்றுவிடும்.

· பெண்களுக்குகாதலையும் ஆண்களுக்கு காமத்தையும் தூண்டக்கூடிய வாசனை மல்லிகையில் உண்டு. இது நரம்புகளைத்தூண்டுகிறது.

· உடலில்எங்கேனும் வீக்கம், தடிப்பு ஏற்பட்டால் மல்லிகையை அரைத்துப் பூசலாம். தலைவலியையும்தீர்க்கிறது.

· மல்லிகைச்சாறுவாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து. அத்துடன் மன நோய்களைக் கட்டுப்படுத்தும் தன்மையும்இதற்கு உண்டு.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!