பச்சை மிளகாயை தினமும் உணவில்
எடுத்துக்கொள்பவர்களுக்கு நுரையீரல் பிரச்னைகள் தீர்கின்றன. சுவாசம் சீரடையும்.
·
இது உடலில் உள்ள கலோரிகளைக்
குறைக்கிறது என்பதால் கெட்ட கொழுப்புகள் அழிந்துபோகின்றன. உடல் பருமன் குறையும்.
·
எதிர்பாராத ஆனந்தம், சந்தோஷ
மனநிலை போன்றவைகளை பச்சை மிளகாய் தருவதால் சோர்வு, கோபம் ஏற்படும்போது உணவில் சேர்க்கலாம்.
·
ரத்தத்தில் உள்ள சர்க்கரை
அளவை நிலைப்படுத்துவதற்கும் பச்சை மிளகாய் பயன்படுகின்றன.
சைனஸ் பிரச்னையால் அவஸ்தையா?
அகத்தி சாப்பிடுங்க
எளிதில் விளையும்
அகத்திக்கீரையில் அயோடின் சத்து நிரம்பியிருப்பதால் மிகவும் நல்லமுறையில் உடல் ஆரோக்கியத்துக்கு
உதவுகிறது.
·
அகத்திக்கீரை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு
நுரையீரல் தொந்தரவு முற்றிலும் நீங்கும். புகையினால் வரும் கேடுகளைக் குறைக்கும்.
·
பித்தம் எனப்படும் உடல்சூட்டை
தணிக்கும் சக்தி அகத்திக்கு உண்டு. அத்துடன் மலச்சிக்கலை முழுமையாக தீர்க்கக்கூடியது.
·
சைனஸ் பிரச்னையால் அவதிப்படுபவர்கள்
வாரம் இரண்டு முறை அகத்திக்கீரை சாப்பிடுவது நல்லது. அகத்தியைப் போட்டு ஆவிபிடிப்பதும்
நல்ல பலன் தரும்.
·
அகத்திக்கீரை சாற்றை தலையில்
தேய்த்துக் குளித்துவர, மனநல பாதிப்புகள் குணமாகும்.
ஓசியில் கிடைக்கும் கறிவேப்பிலையில்
இத்தனை மருத்துவ குணமா?
இலவசமாக கிடைத்தாலும் கருவேப்பிலையில் எக்கச்சக்கமான
மருத்துவக் குணங்கள் நிரம்பியுள்ளன. அதனால் இதனை தூக்கிப்போடாமல் சாப்பிடவேண்டியது
அவசியம்.
·
இதனை தினமும் சாதத்தில்
கலந்து சாப்பிட்டால் முடி கொட்டுவது நிற்கும். தேங்காய் எண்ணெயில் போட்டு தேய்ப்பதும்
பலன் தரும்.
·
புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக்
கட்டுப்படுத்தும் தன்மை கறிவேப்பிலைக்கு உண்டு.
·
கறிவேப்பிலையை பொடிசெய்து
சாப்பிட்டால் ஜீரணக் குறைபாடு நீங்குவதுடன் பசியின்மை நீங்கும்.
·
உடலில் நல்ல கொழுப்பு அதிகரிப்பதற்கு
கறிவேப்பிலை போன்று உதவும் பொருள் வேறு எதுவும் இல்லை.