குழந்தை மாலை போட்டிருந்தால் ஆபரேஷன் செய்யவேண்டிய நிலை ஏற்படும் என்று இப்போதும் கிராமப்புறங்களில் சொல்லப்படுவதுண்டு. ஒருசில குழந்தைக்கு தொப்புள்கொடி மிகவும் நீளமாக இருப்பதுண்டு. அதனால் கர்ப்பப்பைக்குள் சிசு சுற்றிவரும்போது தொப்புள்கொடி கழுத்தில் சுற்றிக்கொள்வதுண்டு.
ஒரு சுற்று காரணமாக பெரும்பாலும் எந்தப் பிரச்னையும் ஏற்படுவதில்லை. ஆனால் நாலைந்து முறை சுற்றியிருப்பது ஆபத்தாக முடியலாம். தொப்புள்கொடி அதிக முறை சுற்றியிருப்பதன் காரணமாக குழந்தைக்கு சுவாசம் தடைபடுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு
இப்படிப்பட்ட சூழல் கண்டறியப்படும்போது உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுப்பது அவசியமாகும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் குழந்தைக்கு சிக்கல் ஏற்படலாம்.