பொதுவாகவே கொண்டை கடலையில் கொழுப்புச்சத்து குறைவு. அதேநேரம் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் தினமும் கொண்டைகடலை சாபிடுவதால் உடல் பலம் பெறும்.
· நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை குறைக்கிறது. அதேநேரம் உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுகிறது.
· உடற்பயிற்சி மூலம் உடலை வலுவாக்க விரும்புபவர்கள் தினமும் ஊறவைத்த கொண்டை கடலை சாப்பிடுவது நல்லது.
· ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக பராமரிப்பதற்கு, கொண்டை கடலையில் இருக்கும் கார்போஹைட்ரேட் உதவுகிறது.
·
இரும்புச்சத்து நிரமியிருப்பதால் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ரத்த சோகை வரும் வாய்ப்பை குறைக்கிறது.
கொண்டைகடலையை சமைத்து சாப்பிடுவதைவிட, தண்ணீரில் ஊறவைத்து பச்சையாக சாப்பிடுவது மிகுந்த பலன் தரும்.