கர்ப்பிணியின் உடல் தன்மை மற்றும் நோய் பாதிப்பு போன்றவை முழுமையாக ஆய்வுசெய்து, அதற்கேற்ப மயக்கமருந்து கொடுக்கப்படும். கர்ப்பிணியின் ரத்த வகையில் தேவையான அளவு பாதுகாப்பாக வைத்திருக்கப்படும்.
குழந்தையின் தலை இருக்கும் இடம் ஸ்கேன் மூலம் அறிந்து, அதற்கேற்க வயிற்றின் குறுக்கே அல்லது செங்குத்தாக வெட்டப்படும். குழந்தை வெளியே எடுத்தபிறகு கிழிக்கப்பட்ட இடத்தில் தையல் போட்டு மூடப்படும்.
இந்த நடைமுறை பொதுவாக ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரங்களுக்குள் முழுமையாக முடிவடைந்துவிடும். நவீன கருவிகளும் திறமையான மருத்துவர்களும் இருக்கும்பட்சத்தில் அறுவை சிகிச்சையின்போது ஆபத்து நேரிடும் வாய்ப்பு இப்போது மிகமிக குறைவு. அதனால் சிசேரியன் குறித்து அச்சப்பட அவசியம் இல்லை.