குழந்தையை பாதிப்பு இல்லாமல் பத்திரமாகத் தூக்குவது எப்படின்னு தெரியுமா?

குழந்தையை பாதிப்பு இல்லாமல் பத்திரமாகத் தூக்குவது எப்படின்னு தெரியுமா?

பிறந்த சில மாதங்களுக்கு தலை வலிமையுடன் நிற்பதில்லை. அதனால் அசட்டையாக தூக்குவதால் குழந்தைக்கு வலி, சுளுக்கு போன்ற சிக்கல் ஏற்படலாம்அதனால் கைகளை நன்றாக அகட்டிக்கொண்டு தலை, கழுத்து, தோள்பட்டை போன்ற மூன்றும் இணைந்து இருக்குமாறு பிடிமானம் கொடுத்துதான் தூக்க வேண்டும்.

குழந்தையை கீழே வைக்கும்போதும் தலைப்பகுதியும் கழுத்துப்பகுதியும் இணைந்தே இருப்பதுபோன்று செயல்பட வேண்டும். விவரம் புரியாமல் ஒருசில சிறுவர்கள் குழந்தையை எடுத்து விளையாட ஆசைபப்டுவார்கள். ஒரு மாதம் கழித்து பாப்பாவை வைத்து விளையாடலாம் என்று சொல்லி தவிர்த்துவிட வேண்டும்.

குழந்தைக்கு கழுத்துப் பகுதியில் ஏதேனும் வலி இருப்பதுபோல் தெரியவந்தால் சுய மருத்துவம்  செய்யக்கூடாது. குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுவது, ஊஞ்சலாடுவது, தூக்கிப்போட்டு பிடிப்பது போன்ற செயல்களிடலும் ஈடுபடக் கூடாது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்