எபிசியோடமி டெலிவரின்னா என்னன்னு தெரியுமா?

எபிசியோடமி டெலிவரின்னா என்னன்னு தெரியுமா?

குழந்தை வெளியே வருவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கும்பட்சத்தில், பிறப்புறுப்பில் சிறிய கீறல் ஏற்படுத்தி வழியை பெரிதாக்குவது எபிசியோடமி எனப்படுகிறது.

பிறப்புறுக்கு கீழ் நேராக அல்லது பக்கவாட்டில் ஒன்று முதல் 3 செ.மீ. வரை கிழிக்கப்பட்டு, குழந்தை வெளிவரும் வழி பெரிதாக்கப்படுகிறது.

கர்ப்பப்பையில் குழந்தை இருக்கும் நிலையைப் பொறுத்து நேராக அல்லது பக்கவாட்டில் கிழிசல் போடப்படுகிறது.

குழந்தை வெளியே வந்ததும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் தையல் போடப்படும். இந்த தையல் மூன்று வார காலத்திற்குள் முழுமையாக குணமாகி விடுகிறது.

பெண்கள் இந்த வழிமுறையை அதிகம் விரும்புவதில்லை என்பதால், வேறு வழியில்லாத பட்சத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. குழந்தைக்கும் தாய்க்கும் ஆபத்து நேரலாம் எனும் பட்சத்தில் இந்த சிகிச்சையை மருத்துவர் மேற்கொள்கிறார்.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!