எலும்பு பொடிப்பொடியாக உதிர்ந்துவிடும் அபாயம் எப்போது வரும் தெரியுமா?

எலும்பு பொடிப்பொடியாக உதிர்ந்துவிடும் அபாயம் எப்போது வரும் தெரியுமா?

சுண்ணாம்பு சத்து, வைட்டமின் டி சத்து குறைபாடு காரணமாகவே பெரும்பாலும் இந்த நோய் ஏற்படுகிறது. தொடர்ந்து பல மணி நேரங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கும் இந்த நோய் உண்டாகலாம்.

கால்சியம் நிரம்பிய பால், கீரை போன்றவற்றை எடுத்துக்கொள்ளாமல் தவிர்ப்பதன் காரணமாகவும் இந்தக் குறைபாடு ஏற்படலாம்.

அதனால் கால்சியம் நிரம்பிய பால், தாது உப்புகள் நிரம்பிய பாதாம், பிஸ்தா போன்றவற்றை சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எலும்புகள் பாதிப்பு அடையாமல் காத்துக்கொள்ள முடியும்.

சூரிய ஒளியில் தினமும் சிறிது நேரமாவது உலாவதும் உணவில் பருப்பு, ராகி, பேரீச்சை, முட்டைகோஸ், ஆரஞ்சு, கொய்யா போன்றவை சாப்பிடுவதன் மூலமும் எலும்புக்கு உறுதி தரலாம்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!