நல்ல நாள் பார்த்து சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுக்கலாமா?

நல்ல நாள் பார்த்து சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுக்கலாமா?

முடிந்தவரை சுகப்பிரசவத்திற்கு முயற்சி செய்து, அதில் முடியாத பட்சத்தில் மட்டுமே சிசேரியன் செய்யவேண்டும்மருத்துவக் காரணம் இல்லாதபட்சத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் குழந்தை பெற்றெடுக்கவேண்டும் என்று எண்ணுவது சரியான செயல் கிடையாது.

பிறப்பு, இறப்பு இரண்டையும் மனிதர்கள் தீர்மானிக்காமல் இருப்பது நல்லது. அதனால் மருத்துவரிடம் குறிப்பிட்ட நாளில் சிசேரியன் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவது சரியல்ல.சுகப்பிரசவமாக அமையவேண்டிய ஒரு நிகழ்வை ஜோதிட காரணம் கொண்டு மாற்றியமைக்க முயலக்கூடாது.

தாய், குழந்தை ஆகிய இருவரின் அல்லது ஒருவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே சிசேரியன் செய்யப்பட வேண்டுமே தவிர, வேறு காரணங்களுக்காக அல்ல என்பதில் ஒவ்வொரு பெண்ணும் உறுதியாக இருக்கவேண்டும்.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!