நெயில் பாலிஷ் போடுபவர்கள் கனிவான கவனத்திற்கு

நெயில் பாலிஷ் போடுபவர்கள் கனிவான கவனத்திற்கு

அடிக்கடி
நெயில் பாலீஷ் போடுவது, அடிக்கடி கலர் மாற்றுவது சரியல்ல. ஏனென்றால் நெயில்
பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவது நகத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, அவற்றை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது நல்லது.

நெயில் பாலீஷ் போடும் போது, பிரஷ் ஷினால், நகத்தின் அடிப்பகுதியில் நுனி வரை ஒரே தடவையாக போட வேண்டும். அப்போது தான் அவை பளபளப்பாக எவ்வித திட்டுக்களும் இன்றி அழகாக காட்சியளிக்கும்

தினமும் நெயில் பாலீஷ் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கி காணப்படும். எனவே வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நெயில் பாலீஷ் உபயோகிக்காமல், இருப்பது நல்லது.

தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.

மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில், காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.

நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்