வெயிலில் சுற்றிவிட்டு ஐஸ் வாட்டர் குடித்தால் ரத்தக்குழாய் வெடிக்கும்! மக்களே உஷார்!

வெயிலில் சுற்றிவிட்டு ஐஸ் வாட்டர் குடித்தால் ரத்தக்குழாய் வெடிக்கும்! மக்களே உஷார்!

ஆம், 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கும்போது, வெயிலில் நன்றாக சுற்றித் திரிந்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் ஃபிரிட்ஜில் இருந்து ஐஸ் வாட்டர் குடித்தால் சிலருக்கு ரத்தக்குழாய் வெடிக்கும் அபாயம் உண்டு என்கிறது மருத்துவம். 

ஐஸ் வாட்டர் குடிப்பது மட்டுமல்ல, ஜில்லென்ற நீரில் கை, கால், முகம் கழுவுவதும் ஆபத்து என்கிறார்கள். அதனால் வீட்டுக்குள் நுழைந்து கிட்டத்தட்ட அரை மணி நேரம் அமைதியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அப்போதுதான் வீட்டுக்குள் நிலவும் வெப்பநிலைக்கு ஏற்ப நம் உடல் வெப்பநிலை சமமான நிலையை அடையும். அதன்பிறகு வேண்டுமானால் குளிர்ந்த நீர் குடிக்கலாம். அதற்கு முன்பு என்றால் நிச்சயம் இயற்கையான சீதோஷ்ணத்தில் இருக்கும் நீரைத்தான் குடிக்க வேண்டும் என்கிறார்கள்.

இதனால் முதியவர்களுக்கு வேறு பல நரம்பு பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அதனால் முதியவர்கள் கண்டிப்பாக வெயிலுக்குப் போய்விட்டு வந்ததும் குளிர்ந்த தண்ணீர் குடித்து, ஆபத்தை விலைக்கு வாங்க வேண்டாம். அதற்குப் பதிலாக இளநீர், மோர், பழக்கூழ் போன்றவற்றைக் குடித்து வெயிலின் தொந்தரவில் இருந்து தப்பிக்கலாம்..

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்