முந்திரி பருப்பில் உள்ள பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம் மற்றும் விட்டமின் கே போன்றவை நமது எலும்பு மற்றும் பற்கள் உற்பத்திக்கும் வலிமைக்கும் துணை புரிகிறது. மக்னீசியம் எலும்புகளின் உருவாக்கத்திற்கும் கால்சியம் எலும்பின் வலிமைக்கும் உதவுகிறது. இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற விபரீதம் வராமல் தடுக்கிறது.
முந்திரி பருப்பில் போதுமான இரும்புச் சத்து இருப்பதால் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் அனிமியா போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. இரும்புச் சத்து நரம்புகள், இரத்த குழாய்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தின் மேம்பாட்டிற்கு மிகவும் அவசியம்.
இதன் ஆன்டி பயாடிக் தன்மையால் வாயு மற்றும் வயிற்று அல்சருக்கு பயன்படுகிறது. முந்திரி பழத்திலிருந்து பெறப்படும் திரவம் ஸ்கர்வி நோயை குணப்படுத்த பெரிதும் பயன்படுகிறது.