நடிகர்கள், நிறுவனர்கள், பெருவணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலிடம் பிடிப்பவர்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடும் அமெரிக்கப் பத்திரிகை போர்ப்ஸ். இந்தப் பத்திரிகை அதிக பணம் சம்பாதிபோரின் பட்டியலை வெளியிட்டது
அதில் கெய்லி ஜென்னர் என்ற 21 வயதுப் பெண் ஃபேஸ் புக் அதிபர் மார்க் சூக்கர் பெர்க்கையும் பின்னுக்குத் தள்ளி 10-வது இடத்தைப் பிடித்துள்ளார். 6 வாரங்களில் 360 மில்லியன் டாலரை சம்பாதித்தது தான் அவரது சாதனை .
கெய்லியைக் கேட்டால் வழக்கமான வணிகர்களைப் போல தனது கெய்லி காஸ்மெடிக் நிறுவனத்தின் தயாரிப்புகளை சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்ததோடு ஸ்டோர்களுக்கு சப்ளை செய்ததுதான் தான் செய்த ஒரே வேலை என்கிறார். ஆனால் அவருடைய நிறுவனத்துடன் பெரு நிறுவனமான அல்ட்டா நிறுவனம் கைகோர்த்ததும் ஆயிரமாயிரம் ஸ்டோர்களுக்கு அவரது தயாரிப்புகள் சென்றடைந்துள்ளன.
54 மில்லியன் டாலர்களில் தொடங்கிய அவரது பிசினஸ் 360 மில்லியன் டாலரை எட்டியது. அதற்கு ஆன உழைப்பு காலம் வெறும் ஆறு வாரங்கள்தான். ஆறு வாரங்களில் அழகு பொருட்களை பயன்படுத்தினால் சருமம் மினுமினுப்பாகும் என்று விளம்பரம் செய்வார்கள்.
ஆனால் ஆறு வாரத்தில் அழகுப் பொருள் தயாரிப்பு நிறுவனமே இத்தகைய வளர்ச்சியை அடைந்த மேஜிக் கெய்லி ஜென்னரின் வாழ்க்கையில் நடந்தேறியுள்ளது