Tamil Tips
லைஃப் ஸ்டைல்

உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் 21 வயது இளம் பெண்! பேஸ்புக் அதிபரையும் பின்னுக்கு தள்ளினார்!

நடிகர்கள்,  நிறுவனர்கள், பெருவணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலிடம் பிடிப்பவர்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடும் அமெரிக்கப் பத்திரிகை போர்ப்ஸ். இந்தப் பத்திரிகை அதிக பணம் சம்பாதிபோரின் பட்டியலை வெளியிட்டது

அதில் கெய்லி ஜென்னர் என்ற 21 வயதுப் பெண் ஃபேஸ் புக் அதிபர் மார்க் சூக்கர் பெர்க்கையும் பின்னுக்குத் தள்ளி 10-வது இடத்தைப் பிடித்துள்ளார். 6 வாரங்களில் 360 மில்லியன்  டாலரை சம்பாதித்தது தான் அவரது சாதனை .

கெய்லியைக் கேட்டால் வழக்கமான வணிகர்களைப் போல தனது கெய்லி காஸ்மெடிக் நிறுவனத்தின் தயாரிப்புகளை சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்ததோடு ஸ்டோர்களுக்கு சப்ளை செய்ததுதான் தான் செய்த ஒரே வேலை என்கிறார். ஆனால் அவருடைய நிறுவனத்துடன் பெரு நிறுவனமான அல்ட்டா நிறுவனம் கைகோர்த்ததும் ஆயிரமாயிரம் ஸ்டோர்களுக்கு அவரது தயாரிப்புகள் சென்றடைந்துள்ளன.

54 மில்லியன் டாலர்களில் தொடங்கிய அவரது பிசினஸ் 360 மில்லியன் டாலரை எட்டியது. அதற்கு ஆன உழைப்பு காலம் வெறும் ஆறு வாரங்கள்தான். ஆறு வாரங்களில் அழகு பொருட்களை பயன்படுத்தினால் சருமம் மினுமினுப்பாகும் என்று விளம்பரம் செய்வார்கள்.

ஆனால் ஆறு வாரத்தில் அழகுப் பொருள் தயாரிப்பு நிறுவனமே இத்தகைய வளர்ச்சியை அடைந்த மேஜிக் கெய்லி ஜென்னரின் வாழ்க்கையில் நடந்தேறியுள்ளது 

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம், வெள்ளி விலை. ஒரே நாளில் இவ்வளவு ரூபாய் உயர்வா?

tamiltips

சித்தர்களால் சொல்லப்பட்ட தூங்குவதற்கான சில முறைகளும் அதன் நன்மைகளும்!

tamiltips

கொரோனாவுக்குப் பயமா இருக்கா..? இதோ நீங்க செய்யவேண்டியது இதுதான்.

tamiltips

குழந்தைக்கு மாதவிலக்கு

tamiltips

முடி உதிர்வை தடுக்க முடியலையா? கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிஞ்சிக்கோங்க!

tamiltips

நீண்ட நாட்களாக மலச்சிக்கல்களால் அல்லல்பட்டு வருபவர்களுக்கு சிறந்த மருந்து செந்நாயுருவி இலை!

tamiltips