கறிவேம்பு அல்லது கறிவேப்பிலை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தினமும் சில கறிவேப்பிலை இலைகளை மென்று தின்பது ரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
• பரம்பரையாக இளநரை பிரச்னையால் பாதிக்கப்படும் வாரிசுகள், தினமும் கறிவேப்பிலை எண்ணெய் பயன்படுத்தினால் இளநரை வருவதை தள்ளிப்போட முடியும்.
• மனதில் குழப்பமும் கவலையுமாக தவிப்பவர்கள் கறிவேப்பிலை சாறு குடித்துவந்தால் மனம் அமைதியடையும்.
• ஜீரண சக்தியை அதிகரிப்பதுடன் உடல் பருமனை குறைக்கும் தன்மையும் கறிவேப்பிலைக்கு உண்டு.
• நாக்கில் சுவை தெரியாத பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள், கறிவேப்பிலை ரசம் குடித்துவந்தால் தீர்வு கிடைக்கும்.
ஞாபகசக்தியை தூண்டுவதுடன், உடலுக்கு புத்துணர்ச்சி தரும் தன்மையும் கறிவேப்பிலைக்கு உண்டு. மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது.