அதேநேரம் காலிஃப்ளவரில் இருக்கும் புழுக்களால் நரம்புகளுக்கு பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் கொதிக்கும் நீரில் காலிஃப்ளவரை போட்டு எடுத்தபிறகுதான் பயன்படுத்தவேண்டும்.
• வைட்டமின் சத்துக்களும் தாது உப்புக்களும் நிரம்பியிருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
• கரோட்டின் சத்து காலிஃப்ளவரில் அதிகம் இருப்பதால், கண் கூர்மைக்கும் கண் அழுத்த பிரச்னைகளுக்கும் நல்லது.
• உடலில் உள்ள டாக்சின்களை வெளியேற்றி சிறுநீரகத்தை சீராக செயல்படவைக்கும் தன்மை காலிஃப்ளவருக்கு உண்டு.
• மன அழுத்தம், படபடப்பு போன்றவற்றை கட்டுப்படுத்தி, மனதுக்கு நிம்மதி தரும் தன்மையும் காலிஃப்ளவருக்கு உண்டு.
காலிஃப்ளவரை எண்ணெய்யில் பொறித்து சாப்பிடும்போது முழுமையான சத்துக்கள் கிடைக்காது என்பதால் அவித்து பயன்படுத்த வேண்டும்.