மீன் வாங்க சந்தைக்கு போகும் போது பெரிய சைஸ் மீனைப் பார்த்தாலே நாமெல்லாம் பயந்துவிடும். மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் அருகில் ராட்சத திமிங்கலமே துள்ளிக் குதித்துள்ளது. ஆனால் மனதிடத்துடன் அதன் பின்னரும் அந்த மீனவர் படகைச் செலுத்தி கரை திரும்பியுள்ளார்
கலிபோர்னியாவின் ஆழ்கடல் ப்அகுதியில் டோக்லஸ் க்ராப்ட் என்ற திமிங்கல ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் படகில் போய் ஹம்பக் வகை திமிங்கலங்களை படம்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு சின்ன மீன்பிடிப்படகில் ஒரே ஒரு மீனவர் வலை விரித்து தன் தேவைக்கு மீன்களை பிடித்துவிட்டு கரை திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது அந்த மீனவரின் படகில் மிக அருகில் இந்த ஹம்பக் வகை திமிங்கலம் துள்ளிக் குதிக்க அதை திமிங்கல ஆராய்ச்சிக்குப் போன டோக்லஸ் க்ராப்ட் தன் கேமராவில் வீடீயோ பதிவு செய்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்த சின்ன படகை திமிங்கலம் சேதப்படுத்தவோ, தட்டிவிடவோ செய்யவில்லை. இதனால் மீனவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
மீனவரும் அச்சப்படாமல் தொடர்ந்து படகை செலுத்தி கரை வந்து சேர்ந்தார். பெரிய கப்பல்களே திமிங்கலத்தால் நிலை குலைந்து விபத்து ஏற்படும் நிலையில், இந்த சிறியபடகில் மீனவர் தப்பியது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
— Ode👩🏼💻📱 (@OdeComunica) May 13, 2019