தாய்ப்பால் கொடுத்தபிறகு என்ன செய்யவேண்டும் - பகலில் தூங்கும் குழந்தைகள் - குழந்தையை பாதிக்குமா தாயின் சர்க்கரை நோய்

தாய்ப்பால் கொடுத்தபிறகு என்ன செய்யவேண்டும் – பகலில் தூங்கும் குழந்தைகள் – குழந்தையை பாதிக்குமா தாயின் சர்க்கரை நோய்

·        
குழந்தைக்குப் போதுமான அளவு பால் கொடுத்தபிறகு தோளில் போட்டு மெதுவாக தட்டிக்கொடுக்க வேண்டும்.

·        
ஏப்பம் வரும் வரையிலும் காத்திருந்து படுக்கப்போட்டால் குழந்தைக்கு வாந்தி வராமல் தடுத்துவிடலாம்.

·        
குழந்தை தேவையான அளவுக்கு பால் குடித்துவிட்டதா என்பதை தாய் உணர்ந்துகொண்ட பிறகே தூங்கவைக்க வேண்டும். இல்லையென்றால் சீக்கிரம் எழுந்துவிடும்.

·        
குழந்தையின் சிறுநீர், மலம் போன்றவற்றை அவதானித்து, குழந்தை போதுமான அளவுக்கு பால் குடித்திருக்கிறது என்பதை அறியலாம்.

குழந்தை பிறக்கும்போது என்ன எடை இருக்கிறதோ, அது நான்கு மாதத்தில் இரட்டிப்பு ஆகவேண்டும். இதுதான் குழந்தை போதிய அளவுக்கு பால் குடித்துவருகிறதா என்பதை அறிந்துகொள்ளும் பரிசோதனை ஆகும்.

 பகலில் தூங்கும் குழந்தைகள்

குழந்தை வயிற்றுக்குள் இருக்கும்போது அனுபவிக்கும் தொந்தரவை போலவே, குழந்தை வெளியே வந்த பிறகும் நிறைய தொந்தரவுகளை தாய் சந்திக்கவேண்டி இருக்கும். அதில் முக்கியமானது உறக்கம்.

·        
குழந்தைக்கு இரவு, பகல் என்ற வித்தியாசம் தெரியாது என்பதை தாயும் மற்றவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

·        
அதனால் ஆரம்ப மாதங்களில் குழந்தை நினைத்த நேரமெல்லாம் தூங்கும். குழந்தை தூங்கும்போதே தாயும் தூங்கப் பழகலாம்.

·        
பால் குடிக்கும்போதே சில குழந்தைகள் தூங்கிவிடும். இந்த நிலையில் குழந்தையை எழுப்பி பால் கொடுக்கக்கூடாது.

·        
ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் குழந்தையின் தூக்கம் ஒரு முறையை நோக்கி வரும் என்பதை தாய் புரிந்துகொள்ள வேண்டும்.

விழித்திருக்கும் நேரத்தில் குழந்தைக்கு நன்றாக விளையாட்டு காட்டினால், தூங்கும் நேரம் அதிகமாகும். நீண்டநேரம் தூங்காத குழந்தையின் நெற்றி, கழுத்துப் பகுதியை வருடிக்கொடுத்தால் குழந்தை சீக்கிரம் தூங்கிவிடும்.

குழந்தையை பாதிக்குமா தாயின் சர்க்கரை நோய்

கர்ப்ப காலத்தில் பெண்ணுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு. மற்ற நாட்டவரைவிட நம் இந்தியப் பெண்கள் 10 சதவிகிதம் கூடுதலாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த நீரிழிவு காரணமாக வயிற்றில் இருக்கும் குழந்தையும் பாதிக்கப்படுமா?

·        
நீரிழிவால் தாயின் ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை, கருவில் இருக்கும் குழந்தைக்கு தொப்புள் கொடி வழியாக செல்கிறது.

·        
தொப்புள் கொடி வழியாகச் செல்லும் சர்க்கரை குழந்தையின் கணையத்தை தூண்டி இன்சுலினை சுரக்கச் செய்கிறது.

·        
கருப்பைக்குள் குழந்தையின் இணையம் இன்சுலினை சுரப்பதால் குழந்தைக்கு பல்வேறு சிக்கல் உருவாகிறது.

·        
இதனால் கருப்பையில் இருக்கும் குழந்தையின் எடை அதிகரிப்பதால் இயற்கை பிரசவத்திற்கான வாய்ப்பு குறைகிறது.

குழந்தையின் உள்ளுறுப்புகளில் குறைபாடு, குறைபிரசவம் போன்ற பிரச்னைகளும் தாயின் நீரிழிவால் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் எதிர்காலத்தில் அந்தக் குழந்தைக்கு நீரிழிவு தாக்கும் வாய்ப்பும் உண்டாகும்.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?