·
டயபர் எப்போது அணிவித்தாலும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கழற்றி, குழந்தையை துடைக்க வேண்டியது அவசியம்.
·
சிறுநீர், மலம் கழிக்காமல் இருந்தால் மட்டும், அந்த டயபரை நன்றாக சுத்தம் செய்துவிட்டு மீண்டும் பயன்படுத்தலாம்.
·
எத்தனை முறை மலம் கழித்தாலும், சிறுநீர் கழித்தாலும் டயபர் உறிஞ்சுவிடும் என்று காலம் தாழ்த்தி கழட்டுவது ஆபத்து.
·
நீண்ட நேரம் காற்றோட்டம் இல்லாமல் ஈரத்தன்மையுடன் இருந்தால் பாக்டீரியாக்கள் மூலம் தொற்றுக் கிருமிகள் புகுந்துவிடும்.
அதனால் குழந்தைக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஐந்து மணி நேரம் மட்டுமே டயபர் பயன்படுத்தலாம். மற்ற நேரங்களில் துணியே போதுமானது. எலாஸ்டிக் டயபரைவிட, டேப் ஒட்டப்பட்ட டயபரே குழந்தைக்குப் பாதுகாப்பானது.