இளஞ்சூடான தண்ணீர் குடிப்பது செரிமானம், வளர்ச்சிதை மாற்றம், எடை குறைப்பு போன்றவற்றிற்கு வழிவகுக்கும். குளிர்ந்த நீரை குடிப்பதை தவிருங்கள், ஏனெனில் இது செரிமான பாதையில் பாதிப்பை ஏற்படுத்தும். குளிர்ந்த நீர் உங்கள் உடலின் பல பாகங்களுக்கு இரத்தம் செல்வதை தடுக்கிறது இதனால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும்போது அது உங்கள் உடலில் திரவங்களின் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, இதனால் உங்களுக்கு மூட்டுவலி ஏற்பட வாய்ப்புள்ளது. உட்கார்ந்து கொண்டு தண்ணீர் குடிக்கும் போது உங்கள் தசைகளும், நரம்புகளும் மிகவும் நன்கு செயல்படும். இதனால் உணவும் மற்ற திரவங்களும் எளிதில் ஜீரணமடைகிறது. மேலும் இதன்மூலம் உங்களின் சிறுநீரக செயல்பாடும் நன்றாக இருக்கும்.
அதிகளவு தண்ணீரை ஒரே நேரத்தில் குடிப்பதை தவிர்க்கவும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். தண்ணீர் குடிப்பதற்கு இடையில் இடைவெளி விட்டு, மூச்சு விட்டு குடிக்கவும்.
வெள்ளி அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். இதில் தண்ணீர் குடிப்பது உங்கள் உடலில் இருக்கும் அனைத்து தோஷங்களையம் சமநிலையில் வைத்துக்கொள்ள உதவும். காலை நேரத்தில் முதல் வேலையாக நீர் குடிப்பது மிகவும் ஆரோக்கியமான பழக்கம் இது உங்களை பல நோய்களில் இருந்து பாதுகாக்கக்கூடும். காலை நேரத்தில் தண்ணீர் குடிப்பது உங்கள் உடலில் இருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதுடன் உங்கள் குடலையும் சுத்தம் செய்கிறது.