சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் கறிவேப்பிலைத் துளிர் சேர்த்து கொதிக்க வைத்து கூந்தலில் தடவிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை எண்ணெய் தடவும்போதும் மண்டை ஓட்டுப் பகுதித் தோலை (Scalp) விரல் நுனியால் மசாஜ் செய்யத் தவறாதீர்கள்.
சில டீஸ்பூன் வெந்தயத்தை நன்கு அரைத்து, அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ளவும். இந்த கரைசலை தலை முடியில் நன்கு தடவி, 40 நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் முடியை அலசி விட வேண்டூம். இதை தொடர்ந்து ஒரு மாத காலம் செய்து வந்தால் முடி கழிதல் குறையும்.
ஷாம்பூ, சோப்பு வகைகளுக்கு `டாட்டா’ சொல்லுங்கள். அதற்குப் பதில் சிகைக்காய், அரப்பு, பாசிப்பருப்பு மாவு போன்ற இயற்கையானவற்றைத் தேர்ந்தெடுங்கள். உணவில் கீரை, முளைக்கட்டிய பயறு வகைகள், உலர் திராட்சை, பேரிச்சை போன்றவைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இரவில் பால் குடிப்பதை மறக்க வேண்டாம்.
அடிக்கடி தலைவலியா? அலட்சியப்படுத்தாதீர்கள். டாக்டரிடம் காட்டுங்கள். தலைவலியால் முடி உதிர்வது நிச்சயம். பேன், பொடுகு, முடி நுனி வெடிப்பு, போன்ற வகைகளுக்கு டாக்டரின் ஆலோசனையைப் பெறுங்கள்.