Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தண்ணீரை கண்டிப்பா இப்படி தான் குடிக்க வேண்டும்! உங்கள் ஆயுளை நீட்டிக்க உதவும்!

இளஞ்சூடான தண்ணீர் குடிப்பது செரிமானம், வளர்ச்சிதை மாற்றம், எடை குறைப்பு போன்றவற்றிற்கு வழிவகுக்கும். குளிர்ந்த நீரை குடிப்பதை தவிருங்கள், ஏனெனில் இது செரிமான பாதையில் பாதிப்பை ஏற்படுத்தும். குளிர்ந்த நீர் உங்கள் உடலின் பல பாகங்களுக்கு இரத்தம் செல்வதை தடுக்கிறது இதனால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. 

நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும்போது அது உங்கள் உடலில் திரவங்களின் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, இதனால் உங்களுக்கு மூட்டுவலி ஏற்பட வாய்ப்புள்ளது. உட்கார்ந்து கொண்டு தண்ணீர் குடிக்கும் போது உங்கள் தசைகளும், நரம்புகளும் மிகவும் நன்கு செயல்படும். இதனால் உணவும் மற்ற திரவங்களும் எளிதில் ஜீரணமடைகிறது. மேலும் இதன்மூலம் உங்களின் சிறுநீரக செயல்பாடும் நன்றாக இருக்கும்.

அதிகளவு தண்ணீரை ஒரே நேரத்தில் குடிப்பதை தவிர்க்கவும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். தண்ணீர் குடிப்பதற்கு இடையில் இடைவெளி விட்டு, மூச்சு விட்டு குடிக்கவும். 

வெள்ளி அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். இதில் தண்ணீர் குடிப்பது உங்கள் உடலில் இருக்கும் அனைத்து தோஷங்களையம் சமநிலையில் வைத்துக்கொள்ள உதவும். காலை நேரத்தில் முதல் வேலையாக நீர் குடிப்பது மிகவும் ஆரோக்கியமான பழக்கம்  இது உங்களை பல நோய்களில் இருந்து பாதுகாக்கக்கூடும். காலை நேரத்தில் தண்ணீர் குடிப்பது உங்கள் உடலில் இருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதுடன் உங்கள் குடலையும் சுத்தம் செய்கிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நஞ்சுக்கொடி காரணமாக சிசேரியன் ஏற்படும் தெரியுமா?

tamiltips

இந்த ஒரு பொருளை தினமும் சாப்பிட்டாலே போதும்! உடல் எடை குறைந்து ஆரோக்யமாக இருக்கலாம்!

tamiltips

சுலபமாக வளரக்கூடிய பிரண்டை செடியின் அதீத மருத்துவ பயன்கள்!

tamiltips

கர்ப்பிணி மல்லாக்கப் படுத்துத்தூங்கினால் ஆபத்தா?இதோ மருத்துவரீதியான பதில்..

tamiltips

கர்பிணிகளுக்கு வளைகாப்பு செய்வதன் காரணம் என்னனு தெரியுமா?

tamiltips

சுகபிரசவத்துக்கு முள்ளங்கி!! கருவுற்ற தாய்மார்கள் வாரம் ஒரு நாள் முள்ளங்கி எடுத்துக்கொண்டால் சுகப்பிரசவம் நிச்சயம்

tamiltips