·
கர்ப்பிணிக்கு ஆர்.ஹெச். பாசிடிவ்
குரூப் என்றால் எந்த பிரச்னையும் இல்லை.
·
கர்ப்பிணிக்கு நெகடிவ் ஆக இருந்து,
கணவருக்கும் நெகடிவ் குரூப் என்றாலும் எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை.
·
அம்மா ஆர்.ஹெச்.நெகடிவ் ஆக
இருந்து, அப்பா ஆர்.ஹெச்.பாசிடிவ் என்றால் முதல் குழந்தைக்கு எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை.
·
ஆனால் பிறக்கும் குழந்தை
ஆர்.ஹெச்.பாசிடிவ் ஆக இருந்தால், இரண்டாவது குழந்தை கருவில் இறக்கவோ, பிறந்தவுடன்
இறக்கவோ வாய்ப்பு அதிகம்.
அதனால் முதல் குழந்தை பிறந்த 48 மணி நேரத்தில் அம்மாவுக்கு ஆன்டி டி என்ற தடுப்பூசி
போட வேண்டும். இந்த தடுப்பூசி போடத் தவறினாலும், இரண்டாவது கர்ப்பத்தின்போது கருவில்
இருக்கும் குழந்தையின் ரத்தம் எந்த குரூப் என்பதை கண்டுபிடித்து ஆன்டி டி தடுப்பூசி
போட்டுக்கொள்ள வேண்டும்.