மிரட்டும் புயல்! 30ந் தேதி கொட்டப் போகுது கனமழை! மீட்பு குழுக்கள் தயார்!

மிரட்டும் புயல்! 30ந் தேதி கொட்டப் போகுது கனமழை! மீட்பு குழுக்கள் தயார்!

சென்னை – வானிலை ஆய்வு மண்டல இயக்குநர் செய்தியாளர் சந்திப்பு. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் சென்னை வானிலை ஆய்வு மண்டல இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி சென்னையில் இருந்து 1600 கிலோமீட்டர் தொலைவில் தற்பொழுது வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இதனை தொடர்ந்து அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் எனவும், வரும் 27, 28 ஆகிய தேதிகளில் புயலாக வலுபெற்று தற்போதைய நிலவரப்படி வட தமிழக கடற்கரையை ஒட்டி நகரக்கூடும் எனவும் அவர் கூறினார். மேலும், இதன் காரணமாக மீன்வர்கள் 25,26 ஆகிய தேதிகளில் தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கும் 27,28 ஆகிய தேதிகளில் தென் மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும் 30 மற்றும் 1ஆம் தேதி அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது., இந்திய வானிலை ஆய்வுமையம் சிவப்பு நிறத்தில் குறிப்பிட்டுள்ளது, ரெட் அலார்ட் என்று மக்கள் அச்சப்பட தேவையில்லை இது ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்பதை குறிப்பதாகும்., 

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!