கூடுமானவரை கூட்ட நெரிசல் இருக்கும் இடங்களை தவிர்த்துவிடுங்கள். நல்ல சினிமா என்றாலும் திரையரங்குகளுக்குச் செல்வதை ஒத்திப் போடுங்கள். திருமண நிகழ்வுகள், அவசியமற்ற பயணங்களை தள்ளிப்போடுங்கள்.
முடிந்த வரையிலும் மருத்துவமனைகளுக்குச் செல்வதை தவிருங்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உறவினர்கள், நண்பர்களை நலம் விசாரிக்க வேண்டும் என்றால், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தபின் செல்லுங்கள். அல்லது தவித்துவிடுங்கள்.
கூட்டமாக இருக்கும் லிஃப்ட்க்குள் ஏறுவதற்கு முட்டி மோதாதீர்கள். ஆம், எத்தனை மாடி என்றாலும் நடந்தே செல்லுங்கள். காலுக்கும் நல்லது, பிரருக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் தப்பித்துக்கொள்ளலாம்.
மாஸ்க் அணிவதால் மட்டும் தப்பித்துவிட முடியாது. அதைவிட முக்கியம் கையை மீண்டும் மீண்டும் கழுவுவது தான் முக்கியம். அதனால் கையைக் கழுவும் சானிடைசர்களை போதுமான அளவுக்கு வாங்கி வைத்துக்கொள்ளவும்.
மருந்தோ தடுப்பூசியோ இல்லை என்பதுதான் உண்மை. அதனால் யாரேனும் ஏதேனும் சொல்கிறார்கள் என்பதைக் கேட்டு எதையாவது குடிக்கவோ, மருந்தைப் போடவோ வேண்டாம். வீட்டில் நாய், பூனை, மாடு, ஆடு வளர்க்கிறீர்கள் என்றால், கொஞ்சம் தள்ளியே வைத்திருங்கள். யாராவது ஓசியாக கொரோனாவுக்கு மருந்து கொடுக்கிறார்கள் என்று சொன்னால், உடனே ஓடிப்போய் வரிசையில் நிற்க வேண்டாம். ஜாக்கிரதையா இருங்க சாரே….