ஏடிஎம்மில் இருந்து காசு மட்டும் இல்லை கொரானாவும் வருமாம்..! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

ஏடிஎம்மில் இருந்து காசு மட்டும் இல்லை கொரானாவும் வருமாம்..! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 4,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 1,14,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனால் இந்த வைரஸ் தாக்குதலுக்கு எதிராக செயல்படுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தரமணியில் அமைந்துள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி முதலிய உடல்சார்ந்த பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு அரங்கேற்றப்பட்டது.

இங்கு பிரபல பூச்சியியல் விடுகதை வல்லுநரான மணிவர்மா என்பவர் கலந்து கொண்டார். அவர் கூறியதாவது, “1960-ஆம் அங்கேயே இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை நாம் சந்தித்தோம். இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ்களின் எண்ணிக்கை 650. இது 651-வது வைரஸ் ஆகும். இந்த வைரஸானது விலங்குகள் அல்லது பறவைகள் மூலம் பரவுவதல்ல. சுகாதாரமின்றி வாழும் மனிதர்களிடமிருந்து பிற மனிதர்களுக்கு பரவக்கூடிய தன்மை உடையது.

சீனா நாட்டு மக்கள் தொகை மிகுதியாகும் சுகாதாரமற்ற வழக்கங்களாலும் இந்த கொரோனா வைரஸ் அதிகளவில் பரவியது. சாதாரணமாக ஒரு மனிதன் தும்மும்போது 70 கிலோ மீட்டர் வேகத்தில் மூச்சு துகள்கள் ஒரு மீட்டர் வரை செல்லும் தன்மை உடையன.

கழிவறைகளில் இருக்கும் வைரஸ் கிருமிகளின் எண்ணிக்கை போலவே பணம் எடுக்கும் ஏடிஎம்-களிலும் இருக்கின்றன. அதே நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கொண்டவர்களின் உடல்களில் 1 வாரம் இருந்துவிட்டு பின்னர் செயலிழந்து போய்விடும்” என்றும் கூறியுள்ளார்.

இந்த கருத்தரங்கமானது தமிழக சுகாதார துறையால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்