கண்ணாடிபோல மின்னும் இளமையுடன் என்றும் இருக்கணுமா! அதுக்கு இந்த ஒன்னு போதும்!

கண்ணாடிபோல மின்னும் இளமையுடன் என்றும் இருக்கணுமா! அதுக்கு இந்த ஒன்னு போதும்!

1 டேபிள்ஸ்பூன் பாதாம் பவுடர் 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு 1 டேபிள்ஸ்பூன் மஞ்சள். ஒரு பவுலில் மேலே சொன்ன பொருட்களையெல்லாம் கலந்து ரோஸ் வாட்டர் கலந்து திக் பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்துப் பின் முகம் கழுவவும். 

2 டேபிள்ஸ்பூன் பாதாம் 1 டேபிள்ஸ்பூன் அரைத்த ஓட்ஸ் 3 டேபிள்ஸ்பூன் காய்ச்சாத பால். ஒருபவுலில் மேலே சொன்ன பொருட்களையெல்லாம் கலந்து திக் பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள். தூங்குப் போவதற்கு முன் இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடலாம். ரோஜா தண்ணீரை பஞ்சினால் தொட்டு முகம் முழுவதும் துடைத்துவிட்டு. இந்த மாஸ்கை முகத்தில் போட்டு 20 நிமிடம் கழித்தோ அல்லது முழு இரவு வைத்துப் பின் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவலாம். பின் நைட் கிரீம்மை பயன்படுத்தவும்.

1 டேபிள்ஸ்பூன் பாதாம் பவுடர் 2 டேபிள்ஸ்பூன் காய்ச்சாத பால். ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள் மேலே சொன்ன இரண்டு பொருட்களையும் கலந்து திக் பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள். வெதுவெதுபான தண்ணீரில் முகம் கழுவி விட்டு முகத்திலும் கழுத்திலும் இந்த ஃபேஸ்பேக்கை போடவும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவேண்டும். இதை உங்களில் கை மற்றும் கால்களில் கூட இந்த மாஸ்க்கை பயன்படுத்தலாம்.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!