காபி குடிக்கும் பழக்கத்தை தவிர்க்க முடியலையா? அப்போ அதன் விளைவுகள் பற்றி தெரிஞ்சிக்கோங்க!

காபி குடிக்கும் பழக்கத்தை தவிர்க்க முடியலையா? அப்போ அதன் விளைவுகள் பற்றி தெரிஞ்சிக்கோங்க!

தினமும் காலையில் காலை உணவை தவிர்த்து விட்டு வெறும் காபி குடிப்பதை வழக்கமாக கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். காபி குடிப்பது பசியை கட்டுப்படுத்தும், அதனால் அதனை உணவுக்கி மாற்றாக பலர் உபயோகிக்கிறார்கள், ஆனால் இது ஆரோக்கியமான பழக்கமல்ல. காலை உணவிற்கு பிறகு காபி குடிக்கலாம் ஆனால் காபியே காலை உணவாக இருப்பது ஆபத்தானதாகும்.

தினமும் அந்த நாளை காபியுடன் தொடங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம், ஆனால் இவ்வாறு செய்வது உங்களின் ஆற்றலை குறைக்கும். உங்கள் உடல் காபிக்குள் காணப்படும் காஃபினுக்கு பதிலளிக்கும் வகையில் இன்சுலினை வெளியிடுகிறது. இதனால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு பெருமளவில் குறையும். இது உங்களை மிகவும் சோர்வாக உணரவைக்கும். எனவே காபி குடிப்பதற்கு முன் எதையாவது சாப்பிடுவது நல்லது.

ஆரோக்கியமான காபி என்பது இங்கிருந்துதான் தொடங்குகிறது. வழக்கமான காபி பெரும்பாலும் பூச்சிக்கொல்லிகளால் நிறைந்துள்ளது. எனவே இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காபி பொடியை உபயோகிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. பெரும்பாலும் உள்ளூர் தயாரிப்புகளை உபயோகிப்பது உங்கள் காபிக்கு அதிக ஆரோக்கியத்தை சேர்க்கும்.

இது வெளிப்படையான ஒன்றாகும், பொதுவாக காபியில் இனிப்பு பொருட்கள் எதுவும் சேர்க்காமல் குடிப்பதுதான் அதன் முழுமையான பலனை வழங்கும். ஆனால் இது மிகவும் கடினமானதாகும். எனவே சர்க்கரை சேர்த்துக் கொண்டாலும் குறைவான அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் செயற்கை இனிப்புகள் சேர்ப்பது உங்கள் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும்.

மிதமான அளவில் காபி குடிப்பது ஆரோக்யமானதுதான். அதிகளவு காபி குடிப்பது அதனால் ஏற்படும் நன்மைகளை தடுக்கும். சராசரியாக ஒரு கப் காபியில் 96மிகி காஃபைன் உள்ளது, ஒருநாளைக்கு இரண்டு கப் காபி குடிப்பது உங்களுக்கு எந்த பக்கவிளைவையும் ஏற்படுத்தாது. ஆனால் ஒருநாளைக்கு 400 மிகி அளவிற்கு அதிகமாக காஃபைன் எடுத்துக் கொள்வது உங்களுக்கு பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்