செக்ஸ்னா என்ன? குழந்தைகளின் விபரீத கேள்விக்கு பதில் சொல்ல எளிதான வழி இதோ!

செக்ஸ்னா என்ன? குழந்தைகளின் விபரீத கேள்விக்கு பதில் சொல்ல எளிதான வழி இதோ!

காலம் மிக வேகமாக போய்க் கொண்டிருக்கிறது. ஒருவேளை இன்று கைக்குழந்தையாக உள்ள உங்களது குழந்தை திடீரென 8 வயதை கடந்த பின், ஒருநாள் உங்களிடம் ஓடிவந்து, செக்ஸ் என்றால் என்ன அர்த்தம்? காதல்னா என்ன அர்த்தம்? இப்படியெல்லாம் கேள்விகள் கேட்க நேரிடலாம்.

அந்த நேரத்தில் நீங்கள் ஊமையாக இருந்துவிட முடியாது. ஆனால், சரியான பதிலை சொல்லித் தர வேண்டும். இதுபற்றி கல்வி நிபுணர் அஞ்சு கிஷ் ஒரு ஆலோசனை சொல்கிறார். அதாவது, உங்களின் குழந்தை செக்ஸ் பற்றியோ, காதல் பற்றியோ ஏதேனும் கேள்வி கேட்டால், உடனே அவர்களை திட்டாதீர்கள். அதேபோல, அவர்கள் கேட்கும் கேள்வியை பரிகாசம் செய்து, சிரிக்கவும் வேண்டாம்.

மாறாக, இப்படி ஒரு கேள்வி கேட்டதற்காக, உங்களின் குழந்தையை பாராட்டச் செய்யுங்கள். பின்னர், இதற்கு பதில் சொல்ல அவகாசம் தரும்படி, குழந்தையிடம் கேளுங்கள். சில நாட்கள் அவகாசம் எடுத்துக் கொண்ட பின், முறையாக, ஆய்வு முடிவுகளை மேற்கோள் காட்டி, உங்களின் குழந்தைக்கு, செக்ஸ் பற்றியோ, காதல் பற்றியோ விளக்கமாக எடுத்துச் சொல்லிவிடுங்கள். வீட்டிலேயே நீங்கள் இதைச் சொல்லிக் கொடுத்துவிட்டால், வெளியாட்கள் அவர்களை தவறாக வழிநடத்த இடம் வராது.

அதேபோல, அந்தரங்க உடல் உறுப்புகள் பற்றிய புரிதலையும் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை. அதேபோல, மேற்கண்ட விவகாரங்களில், சுருக்கமான அதேசமயம், தெளிவான பதில்களை சொல்வது நலம். ரொம்ப விளக்கமாகவும், மிக மிகச் சுருக்கமாகவும் எந்த பதிலும் சொல்லக்கூடாது. நீங்கள் சொல்லும் பதில் உங்களின் குழந்தையை குழப்பக்கூடியதாக இருக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

இவ்வாறு அஞ்சு கிஷ் குறிப்பிடுகிறார்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்