ஒரே நேரத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி! நெகிழும் தந்தை! உருகும் மகள்!

ஒரே நேரத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி! நெகிழும் தந்தை! உருகும் மகள்!

புதுச்சேரியை அருகே கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் 46 வயது சுப்ரமணியன். குடும்பச் சூழ்நிலை காரணமாக 7-ஆம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்ட இவர், பொதுப்பணித்துறையில் பணியாற்றி வந்த தனது தந்தை இறந்து விட்டதால் அவருடைய பணி தனக்கு கிடைத்ததாகக்  கூறுகிறார். 

தற்போது கள ஆய்வாளராக உள்ள சுப்பிரமணியன், பணியில் நீண்ட அனுபவம் இருந்தும் உரிய படிப்பில்லாததால் பதவி உயர்வுகள் கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கிறார். படித்து  பதவி உயர்வு பெறும் லட்சியத்துடன் 2017-ஆம் ஆண்டு டூட்டொரியல் மையம் மூலம் 8-ஆம் வகுப்புக்கும் கடந்த ஆண்டு 10-ஆம் வகுப்புக்கும் தேர்வு எழுதிய நிலையில் ஆங்கிலத்திலும் கணக்கிலும் மட்டும் இருமுறை தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் 10-ஆம் வகுப்புத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மகள் திரிகுணா, தனது தந்தைக்கு வகுப்பு எடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திரிகுணா பள்ளியில் இரண்டாவது மாணவியாக தேறியதோடு அவரது தந்தை சுப்பிரமணியனும் ஆங்கிலம் மற்றும் கணிதத் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம் ஒரே நேரத்தில் 10-ஆம் வகுப்பு தேறிய தந்தையும், மகளும் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளனர். தனது தந்தையை பட்டப் படிப்பு முடிக்கச் செய்ய பாடுபடப் போவதாகவும் திரிகுணா கூறுகிறார். 

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!