டீன் ஏஜ் வயதினருக்குத் தேவை நண்பர்கள் மட்டும்தான், பெற்றோர்கள் இல்லை!!

டீன் ஏஜ் வயதினருக்குத் தேவை நண்பர்கள் மட்டும்தான், பெற்றோர்கள் இல்லை!!

குழந்தைப் பருவத்தில்  பெற்றோர்
அல்லது உடன்பிறப்புகளுடனே
பொழுதைப் போக்குவார்கள்.
பெற்றோரிடமிருந்து விலக
ஆரம்பிக்கிற விடலைப்
பருவத்தில், அவர்கள்
சக வயது
நண்பர்களுடன் உணர்வுப்பூர்வமான
பந்தத்தை உருவாக்கிக் 
கொள்ளவே விரும்புவார்கள்.
புரிதலுக்கும் ஆதரவுக்கும்
வழிகாட்டுதலுக்கும்அவர்களுக்கு
பெற்றோரையும் குடும்பத்தாரையும்
விடநண்பர்களே 
சரியானவர்களாகத் தெரிவார்கள்

டீன் ஏஜ்
வயதினருக்கு தங்கள்
வயதுக்காரர்களின் அபிப்ராயம்தான்
மிக முக்கியம்.
இந்த வயதில்
மற்றவர்கள் என்ன
சொல்கிறார்கள், என்ன
நினைக்கிறார்கள் என்பதைத்தான்
பார்ப்பார்கள். நண்பர்கள்
செய்வதையே தானும்
செய்வார்கள். பெற்றோர்கள்
மிகவும் ஆசையுடன்
சினிமாவுக்கு கூப்பிட்டால்கூட
போக மறுப்பார்கள்.
அதேநேரம் நண்பன்
ஒருவன் கோயிலுக்குக்
கூப்பிட்டால்கூட, மந்தை
ஆடு போல்
மறுபேச்சு இல்லாமல்
பின்னாடியே போவார்கள்.

இதைக் கண்டதும்,
உன் ஃபிரெண்டு
சொன்னாத்தான் கேட்பியா?
நான் சொன்னா
கேட்க மாட்டியா?
 என்று
பெரியவர்கள் சண்டைக்கு
நின்றாலும், இந்த
விஷயத்தில் இளையவர்களை
மாற்றவே முடியாது.
ஏனென்றால் அவர்களது
மூளை, நண்பர்கள்
சொல்வதை மட்டுமே
எடுத்துக்கொள்ளும். இந்த
வயதினருக்கு பெற்றோர்களைவிட
நண்பர்கள்தான் முக்கியமானவர்களாகவும்,
எல்லாம் தெரிந்தவர்களாகவும்
இருப்பார்கள். அவர்களுக்காக
பெற்றோரை பகைத்துக்கொள்ளவும்
தயங்கவே மாட்டார்கள்.

வீட்டில் கிடைக்காத
புதிய உலக
அனுபவம் அவர்களுக்கு
அந்த நட்பு
வட்டத்தில் கிடைப்பதாக
உணர்வார்கள். விடலைப் 
பருவத்துப் பிள்ளையின்
வாழ்க்கையில் உண்டாகும் 
நல்லது, கெட்டதின்
தாக்குதலை சமாளிக்க
அவர்களது நண்பர்கள்
உதவுவார்கள். டீன்
ஏஜ்  பருவத்தில்
பல சமுதாய,
குடும்ப மற்றும்
படிப்பு சார்ந்த
சுமைகளுக்கு ஆளாவார்கள்.
நல்ல நட்பு
இருக்கும் பிள்ளைகளுக்கு
படிப்பில், விளையாட்டில் 
அச்சுமைகளை சமாளிக்கவும்,
அவற்றால் உண்டாகும் 
மன அழுத்தங்களைப்
பக்குவமாகக் கையாளவும்
முடியும். அதேநேரம்
கெட்ட நட்பு
இருந்தால் பொறாமை,
போட்டி மனப்பான்மை,
தன்னுடைய இன்பத்தை
மட்டும் விரும்புதல்,
குடும்பத்தில் இருந்து
விலகுதல் போன்றவை
ஏற்படலாம்.

இந்தப் பிரச்னையை
பெற்றோர்கள் எளிதில்
தீர்க்கமுடியும். ஆம்,
உங்கள் பிள்ளையின்
நண்பர்களை எல்லாம்
தெரிந்துகொள்ளுங்கள். அனைவரிடமும்
நீங்களும் அன்பொழுகப்
பழகுங்கள். அந்த
நண்பர்கள் எல்லோரும்
நல்லவர்தானா என்பதை
அவர்களுக்குத் தெரியாமலே
அறிந்துகொள்ளுங்கள். தவறானவர்கள்
என்று தெரியவந்தால்
மட்டும், தக்க
ஆதாரத்துடன் உங்கள்
பிள்ளைகளிடம் சொல்லி,
விலகச் சொல்லுங்கள்.
மற்றபடி பிள்ளையின்
நண்பர்களை பெற்றோர்களும்
நண்பர்களாக எடுத்துக்கொண்டால்,
இந்தப் பிரச்னை
சரியாகிவிடும்.

 அதைவிடுத்து, நண்பர்களுடன் சேரக்கூடாது என்று உங்கள் பிள்ளைக்கு கட்டளை போடுவது மிகவும் தவறான அணுகுமுறை ஆகும். இது உங்கள் பிள்ளையை மூர்க்கத்தனமாக மாற்றும் செயல். நண்பர்கள் இல்லாத உலகத்தை அவர்களால் கற்பனைகூட செய்யமுடியாது என்பதால் ஆவேசமாகி விடுவார்கள். நண்பர்களை முறைப்படுத்தலாமே தவிர, முற்றிலும் தடுக்க்கூடாது. இந்த பிரச்னையை எளிதாக கையாண்டாலே, டீன் ஏஜ் வயதினரின் மற்ற அனைத்துப் பிரச்னைகளையும் எளிதில் தீர்த்துவைக்க முடியும்

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்