டீன் ஏஜில் காதல் ஏன் வருகிறது!! எப்படி வருகிறது?

டீன் ஏஜில் காதல் ஏன் வருகிறது!! எப்படி வருகிறது?

முளைச்சு மூணு இலை விடலை… அதுக்குள்ள காதல் கேட்குதா என்று கேட்பார்கள். உண்மை என்ன தெரியுமா? பதிமூன்று வயதில் ஒரு பெண் காதல் வயப்படுவது வயதிற்கு மீறிய செயலே இல்லை. மனிதன் தோன்றிய காலம் முதல் பெண்களுக்கு முதல் காதல் ஏற்படும் வயதே இது தான். முதல் காதல் என்றால், இன்னும் நிறைய காதல் வருமோ என்கிறீர்களா?


ஆமாம். உயிர் உள்ள வரை எதிர் பாலினத்தின் மேல் ஈர்ப்பும் அவ்வப்போது காதலும் ஏற்படத்தான் செய்யும். அதனால் மகள் அல்லது மகன் காதல் செய்கிறாளே என்று ஓவராய் பதறாதீர்கள். இந்த வயதில் முதல் காதல்கொள்வது அவள் உடம்பில் ஹார்மோன்கள் நார்மலாய் செயல்படுகின்றன என்பதற்கான அறிகுறி. 


முதல் அனுபவம் என்பதால் காற்றில் மிதப்பது போல் திரிவார்கள். சாப்பிட மறப்பார்கள், தங்களைத் தாங்களே மிகவும் அலங்கரித்துக்கொள்வார்கள். இப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது?


உங்கள் பிள்ளைக்கும் உங்களுக்கும் பொதுவான ஒரு உறவினரை அல்லது நண்பரைப் பிடியுங்கள். அவர்கள் முதல் காதல் என்று எப்படியெல்லாம் சொதப்பினார்கள் என்பதை விளையாட்டாகச் சொல்லி புரியவையுங்கள். இன்னும் சிலர் முதல் காதல் என்று எப்படியெல்லாம் காமெடி செய்தார்கள் என்பதையும் சொல்லுங்கள். இப்படி எடுத்துச்சொன்னால், ‘ஓ… இது எல்லோருக்கும் இந்த வயதில் ஏற்படும் சாதாரண உணர்வு’ என்ற உண்மை புரியத் தொடங்கும். முதல் காதல் என்ற அனுபவத்தில் இருந்து வெளிவருவார்கள்.  

இதைவிடுத்து காதல் என்றதும் அடிப்பது, மிரட்டுவது, படிப்பை நிறுத்துவது என்று தவறான காரியங்களில் இறங்காதீர்கள். இது அவர்களது உணர்வுகளை புண்படுத்திவிடும். ஒரு சாக்பீஸை உடைப்பதற்கு அரிவாளைப் பயன்படுத்துவது போன்ற தவறான அணுகுமுறை. காதல் உணர்வு என்பது மிகச் சாதாரண விஷயம் என்பதை ஆசிரியர்களும் புரியவைக்க வேண்டும். அப்போதுதான் இந்த வயதினர் காதல் மோகத்தில் இருந்து வெளியே வருவார்கள்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்