10 மாவட்டத்தில் வெயில் பட்டையை கிளப்பும்! அனல் காற்று வீசும்! பீதி கிளப்பும் வானிலை மையம்!

10 மாவட்டத்தில் வெயில் பட்டையை கிளப்பும்! அனல் காற்று வீசும்! பீதி கிளப்பும் வானிலை மையம்!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என  சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருந்து வருகிறது, இந்நிலையில் இன்றும் நாளையும் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம்,வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி,தர்மபுரி, சேலம்,நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 

அடுத்த 2 தினங்களுக்கு இயல்பை விட வெப்பம் 3டிகிரி முதல் 5டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் இதனால் அனல் காற்று  (வெப்ப அலை) வீசும் என்றும்  சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகப்பட்சமாக 102 டிகிரி  பாரன்ஹீட் வெப்பநிலை , திருத்தணி ,வேலூர் கரூர்,தர்மபுரி ,சேலம் மதுரை திருச்சி ஆகிய நகரங்களில் பதிவு 

சென்னையை பொருத்த வரை வானம் தெளிவாக இருக்கும்,அதிகப்பட்ச வெப்பநிலையாக 36டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!