உமிழ்நீரைச் சுரக்கச் செய்து உணவு செரிமானத்தில் சிறந்த முறையில் பங்களிப்பு செய்கிறது. இந்த சுவை அதிகமானால் தோல் வியாதிகள் தோன்றுகின்றன. உடல் சூட்டினை அதிகப்படுத்தி கட்டிகள், பருக்கள் தோன்றும். கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்பு சுவை அதிகமாய் இருக்கின்றது.
உப்பு போட்டு சாப்பிடுவது அதுவும் அயோடின் கலந்த உப்பு சாப்பிடுவது உடம்புக்கு கட்டாயத் தேவை ஆகும். அதனால் உப்பு எடுத்துக்கொள்ள கலங்க வேண்டாம், அதிகம் மட்டும் வேண்டாம்.