உடல் உறவுக்கு பிறகு ஆணும் பெண்ணும் உடனடியாக தண்ணீர் குடிக்க வேண்டும்..! ஏன் தெரியுமா?

உடல் உறவுக்கு பிறகு ஆணும் பெண்ணும் உடனடியாக தண்ணீர் குடிக்க வேண்டும்..! ஏன் தெரியுமா?

உடலுறவு கொண்ட பிறகு உடலை கழுவுவது, சிறுநீர் பாதை தொற்றுகளிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். வெது வெதுப்பான நீரில் பிறப்புறுப்புகளை கழுவுங்கள், உறுப்பின் உள்ளே கழுவுவதை தவிர்க்கவும். பாதுகாப்பான சோப்புகளை பயன்படுத்தி சுத்தப்படுத்த வேண்டும். ஆண்கள் குறியை மெதுவாக இழுத்து தோலின் அடியில் கழுவுவது நல்லது. 

பெண்கள் உடலுறவுக்கு பின்னர் யோனியின் உள்ளே தண்ணீர் அல்லது மற்ற திரவங்கள் கொண்டு சுத்தம் செய்யக்கூடாது அது நோய் ஏற்பட வழிவகுக்கும். ஏனெனில் யோனியை பாதுகாக்கும் பாக்டீரியாக்களின் இயற்கை சமநிலை பாதிக்கலாம். உடலுறவுக்கு பின்னர் யோனியை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுவது நல்லது. அது தன்னை இயல்பாகவே சுத்தம் செய்துகொள்ளும்.

புத்துணர்ச்சிக்கு உதவும் கிரீம்கள், ஸ்ப்ரேகள் சோப்புகள், சவர்க்காரம், ஷாம்பு, வாசனை திரவியங்கள் அல்லது லோஷன்கள் உங்கள் சருமத்தில் கடுமையான பாதிப்புகளை உண்டாக்கலாம். உடலுறவுக்கு பின்னர் மிதமான சுடுநீரில் மென்மையான துடைத்து விடுங்கள். பாதிப்புகளை உண்டாக்கும் வாசனை திரவியங்கள், பொடிகள் மற்றும் ஸ்ப்ரேகளை தவிர்க்கவும்.

உடலுறவின்போது பாக்டீரியாக்கள் சிறுநீர் பை மற்றும் சிறுநீர் குழாய் பாகங்களில் தொற்றுநோய் வாய்ப்புகளை உண்டாக்கலாம். உடலுவுக்கு பின்னர் நீங்கள் சிறுநீர் கழித்தால அது வெளியேறிவிடும். ஒவ்வொரு முறையும் உடலுறவுக்கு பின்னர் தண்ணீர் குடிக்க வேண்டும். நீங்கள் தண்ணீர் குடிக்கும்போது, இன்னும் அதிகமாக சிறுநீர் கழிக்க தூண்டப்பட்டு, தொற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

நல்ல இறுக்கமில்லாத ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் இறுக்கமான உள்ளாடைகளை தவிர்க்க வேண்டும். பருத்தி உள்ளாடைகளை, ஆண்கள் மற்றும் பெண்கள் உடுத்தும்போது அவை காற்றோட்டதை கொடுப்பதுடன் ஈரப்பதத்தை உறிஞ்சி கொள்ளும்.

நீங்கள் அடிக்கடி புது புது ஆட்களுடன் உடலுறவு கொள்வதாக இருந்தால், துணையுடன் சேரும் முன்பு பாலியல் நோய் ஏதேனும் உள்ளதா என்று சோதித்துப் பார்ப்பது நல்லது. இதன் அறிகுறிகளாக விந்து முன்பே வெளியேறுதல், வலி, கொப்புளங்கள், புண்கள், புள்ளிகள், அல்லது உங்கள் பிறப்புறுப்புகளை சுற்றி கட்டிகள் ஆகியவற்றைக் கருதலாம்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்