அழகு ஆரோக்கியம் இரண்டிற்கும் வனப்பு தரக்கூடிய ஒரு பழம் என்றால் பப்பாளி! எப்படி?

அழகு ஆரோக்கியம் இரண்டிற்கும் வனப்பு தரக்கூடிய ஒரு பழம் என்றால் பப்பாளி! எப்படி?

பப்பாளி பழத்தை கூழாக்கி முகத்தில் தடவி பின் 15 நிமிடம் பொருத்து தண்ணீர் உற்றி கழுவினால் முகம் பளபளக்கும். ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்களும் காயாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். காயாக சாப்பிடத்தான் யோசிக்க வேண்டும். பழமாக சாப்பிட யோசிக்க வேண்டியதே இல்லை. 

அஜீரணக் கோளாறு சரிசெய்யப்படும். என்ஸமைன் பப்பாளியில் அதிகம் இருப்பதால் அது உணவை எளிதில் ஜீரணித்துவிடும். நார்ச் சத்தும் பப்பாளியில் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையும் வராது. அழகு பராமரிப்பிற்கும் உதவக் கூடியது. சருமத்தை புத்துணர்வாக வைத்துக் கொள்வதிலும், பருக்கள் இல்லா தெளிவான முகத்தைப் பெறவும் பப்பாளி பேருதவியாக இருக்கிறது.

விட்டமின் k மற்றும் c சத்துக் குறைபாடுக் காரணமாகத்தான் எலும்பு முறிவு பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது. இந்த இரண்டு சத்துகளும் பப்பாளியில் அதிகமாக இருக்கிறது. நீரிழிவு நோய் இருப்போரும் பப்பாளியை உண்ணலாம். இதில் சர்க்கரையின் அளவும் குறைவு என்பதால் பயமின்றி தாராளமாக உண்ணலாம்.

கர்ப்பிணி பெண்கள் இப்பழத்தை உண்ணாமல் இருப்பது நல்லதுஅதிகம் பழுக்காத பப்பாளியின் பால் கருக்கலைப்புக்கு வழிவகுக்கும். பப்பாளி காயை அதிகம் உட்கொண்டால் வயிற்று போக்கு அல்லது வயிற்று வலி ஏற்படலாம்பப்பாளியின் காயை கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லதல்ல என்று பிரிட்டிஷ்ஷில் உள்ள ஊட்டச்சத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏனெனில் இதில் உள்ள பெப்சின் என்னும் பொருள், கருப்பைக்கு சுருக்கத்தை ஏற்படுத்தி கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமல்லாமல், இதில் பாப்பைன் கருவின் வளர்ச்சியை குறைத்து, கருவிற்கு செல்லும் அனைத்து சத்துக்களையும் தடுத்துவிடும்.

மேலும் கர்ப்பத்தில் பிரச்சனைகள் இருந்து கர்ப்பமானவர்கள், இந்த பப்பாளியை சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஆகவே பப்பாளி பழமாக இருந்தாலும் சரி, காயாக இருந்தாலும் சரி, கர்ப்பிணிகள் இதை முற்றிலும் தவிர்ப்பது பாதுகாப்பானது

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்