அழகு தரும் மகிழம்பூ - நீர்ச்சத்து நிறைந்த முலாம் பழம் - நீரிழிவு நோயாளியா சாமை சாப்பிடுங்க

அழகு தரும் மகிழம்பூ – நீர்ச்சத்து நிறைந்த முலாம் பழம் – நீரிழிவு நோயாளியா சாமை சாப்பிடுங்க

·        
 மகிழம்பூவுடன் ரோஸ் வாட்டர் கலந்து அரைத்து முகத்தில் போட்டு காயவைத்தபின் குளித்தால் மிகம் மிருதுவாகி பளபளப்படையும்.

·        
மகிழம்பூவை ஒரு நாள் முழுவதும் தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து வடிகட்டி, தைலத்தை உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால் புத்துணர்ச்சியும் தோல் பிரச்னைகளும் தீரும். SHAPE
 * MERGEFORMAT

·        
நல்லெண்ணெய்யில் மகிழம்பூவை
சேர்த்துக் காய்ச்சி வாரம்
ஒரு தடவை
தலைக்குத் தேய்த்து
குளித்தால் கூந்தல்
மென்மையாகும். இளநரை தீரும்.

மகிழம்பூவை ஊற வைத்து அரைத்த விழுதுடன் பயத்தம்பருப்பு மாவைக் கலந்து குளித்தால் வியர்வை நாற்றம் போகும். மரு, பரு தொல்லை தீ

நீர்ச்சத்து நிறைந்த
முலாம் பழத்தை யார் சாப்பிடக்கூடாது?

வெள்ளரி குடும்பத்தைச் சேர்ந்த முலாம் பழம் சாப்பிடுவதை பலரும் விரும்புவதில்லை. இந்தப் பழத்தின் மருத்துவத் தன்மையை அறிந்துகொண்டால் நிச்சயம் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள்.

·        
உடல் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முலாம் பழம் சாப்பிட்டால் உடனடி நிவாரம் தெரியும். சிறுநீர் எரிச்சல், வயிற்றுப் பொருமலுக்கும் ஏற்றது.

·        
முலாம்
பழத்தைத் தொடர்ந்து
சில நாட்கள்
சாப்பிட்டுவந்தால், வயிற்றுப்
புண் பூரண
குணமடையும். மிகச்
சிறந்த மலமிளக்கியாகவும்
செயல்படும்.

·        
இந்தப் பழத்தை கூழாக்கி பூசிக்கொண்டால், தோல் பிரச்னைகள் நீங்கி பளபளப்பு ஏற்படும்.

·        
இது சீக்கிரம் கபத்தை உருவாக்கும் என்பதால் ஆஸ்துமா, வலிப்பு நோயாளிகள் பயன்படுத்தக்கூடாது. அதேபோல் மூட்டுவலி, இடுப்பு வலி இருப்பவர்களும் பயன்படுத்தக்கூடாது.

நீரிழிவு நோயாளியாசாமை சாப்பிடுங்க

சிறுதானியங்களில் ஒன்றான சாமையை வாரத்துக்கு ஒரு முறையேனும் உணவுப் பொருளாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

·        
சாமையில்
செய்த உணவுகள்
எல்லா வயதினருக்கும்
ஏற்றவை. மிகச்
சுலபமாக ஜீரணமாகும்மலச்சிக்கலைப்
போக்கும் தன்மை
உடையது.

·        
குறைவாக சாப்பிட்டாலும் வயிறு நிரம்பிவிடும் என்பதால் பசி விரைவில் ஏற்படாது. தொடர்ந்து எடுத்துக்கொண்டால் உடல் பருமன் குறையும்.

·        
சாமையில் இருக்கும் புரதம்
எலும்புகளின் வலுவுக்கும்,
தசைகள் இயக்கத்திற்கும்
உதவுகின்றனமூளைக்குச்
செல்லும் செல்களுக்கு
சக்தி தருவதால்  நல்ல
உறக்கம் பெறலாம்.

·        
ரத்தத்தில்
மெதுவாக குளுக்கோஸை
வெளிவிடுவதால் நீரிழிவுக்காரர்களுக்கு மிகவும் ஏற்றது. மேலும் கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்களுக்கும் மிகச்சிறந்த சத்து உணவு இது.



Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்