மாஞ்சு நூலில் சிக்கி உயிருக்கு போராடிய காகம்! தீயணைப்பு வீரர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

மாஞ்சு நூலில் சிக்கி உயிருக்கு போராடிய காகம்! தீயணைப்பு வீரர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

   சென்னை
தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் இன்று காகம் ஒன்று துடித்துக்
கொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்த போது அந்த காகம் மாஞ்சா நூலில் சிக்கி
தவித்துக் கொண்டிருந்தது. மாஞ்சா நூலில் சிக்கிய படி காகம் ஒன்று பல மணி
நேரத்திற்கு மேலாக காகம் சிக்கி தவித்தது.

 

  இதை கண்ட அங்கு பணியில் இருந்த 108 ஆம்புலன்ஸ்
ஊழியர்கள் காகத்திற்கு உதவ முன்வந்தனர். ஆனால் அவர்களால் காகத்தை எப்படி
காப்பாற்றுவது என்று தெரியவில்லை. இதனால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனே தீயணைப்பு
கட்டப்பாட்டு  அறையை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தனர். காகம் ஒன்று உயிருக்கு
போராடுவதாகவும், உடனடியாக வந்து காப்பாற்றும்படியும் தெரிவித்துள்ளனர்.

 

   தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் காகம் தானே
உயிருக்கு போராடுகிறது என்று அலட்சியமாக இருக்கவில்லை. 
தகவலின் பேரில்,
தேனாம்பேட்டை தீயணைப்பு வீரர்கள் டி.எம்.ஸ வளாகத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் மாஞ்சா
நூலில் சிக்கிய படி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த காகத்தை உடனடியாக மீட்டனர்.
அதோடு மட்டும் அல்லாமல் காகத்தை சுற்றி சிக்கியிருந்த மாஞ்சா நூலை அகற்றினர்.

 

   பின்னர் அந்த காகத்திற்கு உணவு மற்றும்
தண்ணீர் வழங்கி காகத்திற்கு முதலுதவி சிகிச்சையும் அளித்தனர். இதனை தொடர்ந்து அந்த
காகம் வானில் பறந்து சென்றது. காகத்தை மீட்க 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் உதவினர்.
காகம் வெறும் பறவை தானே என்று நினைக்காமல் அதற்கு உதவ முன்வந்த 108 ஆம்புலன்ஸ்
ஊழியர்களையும், விரைந்து வந்து காகத்தை மீட்ட தீயணைப்பு வீரர்களையும் அங்கிருந்த
பொதுமக்கள் பாராட்டினர்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்