மலேசியாவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் குடியேறி, வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில், இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வீட்டு வேலையில் தொடங்கி, கட்டிட வேலை வரை செய்துவருகின்றனர்.
இதுபோல, கோலா லம்பூரில் தங்கி, கட்டிடம் கட்டும் வேலையை செய்து வரும் தொழிலாளி ஒருவரை புகைப்பட கலைஞர் ஒருவர் படம்பிடித்துள்ளார். சொந்த நாட்டை இழந்து, வயிற்றுப்பாட்டுக்காக, உயிர்பிழைத்து, கிடைத்த வேலையை செய்துவரும் அந்த இளைஞரின் கண்கள் பார்ப்பதற்கு, மிக உக்கிரமாக உள்ளன. அதனை பார்த்து வியந்த, அபீடன் முங்க் என்ற புகைப்பட நிபுணர், அந்த இளைஞரிடம் நீண்ட நேரம் பேசி, பெரும் முயற்சி செய்து, இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.
தனது புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட அவர், ”மிகவும் கூச்ச சுபாவம் உள்ள உலக நடப்பு தெரியாத இந்த கட்டிட தொழிலாளியை பெரும் முயற்சி செய்து போட்டோ எடுத்துள்ளேன். இந்த இளைஞன் அழகாக இருக்கிறான்தானே?,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் இதுவரை, 24,500 ரீட்வீட்களையும், 68,700 லைக்குகளையும் பெற்றுள்ளது. இது பார்ப்பதற்கு, கடந்த 1984ம் ஆண்டில் வெளியாகி உலகையே வியக்கச் செய்த ஆப்கன் கேர்ள் புகைப்படம் போலவே உள்ளதாக, பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.